எலுமிச்சை சேமியா செய்ய
நீளமான சேமியா - 50 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
வேர்கடலை
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு
நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
1 பழம் - லெமன் சாறு
கொத்துமல்லி தழை
எலுமிச்சை சேமியா செய்முறை:
1. எலுமிச்சை சேமியா செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிநிலையை அடைந்தவுடன் சேமியாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
2. சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, காய்ந்த சிவப்பு மிளகாய், வேர்க்கடலை, பெருங்காயதூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
4. சிறிது நேரம் கலந்தவுடன் இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கவும்.
5. இந்த வதக்கியவற்றில் வேகவைத்த சேமியா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.
6. எலுமிச்சை சேமியா தயார் .
0 comments:
Post a Comment