தேவையான பொருட்கள்
சர்க்கரை - 1/2 கப்
பிரட் - 6 துண்டுகள்
கஸ்டர்டு தூள் - 2 மேசைக்கரண்டி
வெனிலா எசென்ஸ் - ½ தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
பால் - 1 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
கேரமல்பிரட்புட்டிங் செய்முறை:
1. கேரமல் பிரட் புட்டிங் செய்வதற்கு சர்க்கரை பாகு செய்ய வேண்டும் அதற்க்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து பாகு நிலை வரும் வரை காய்ச்சவும்.
2. சர்க்கரை பாகை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பரப்பி வைக்கவும்.
3. அடுத்து ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் தூள் மற்றும் பால் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
4. அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி சிறு சிறு துண்டுகளாக பிய்த்து மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்துக்கொள்ளவும்.
5. இந்த பிரட் தூளை சூடான பாலில் சேர்த்து கரைக்கவும்.
6. இந்த கலவையில் வெனிலா எசென்ஸ், பாலில் கரைத்த கஸ்டர்ட் தூள், சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
7. இந்த கலவையவையை சர்க்கரை ஊற்றி வைத்த பாத்திரத்தில் ஊற்றி பரப்பி விட்டு அந்த பாத்திரத்திற் பாயல் பேப்பரை வைத்து மூடி வைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுற்றி இந்த கேக் பாத்திரத்தை வைத்து முப்பது நிமிடம் வேகவைக்கவும்.
9. முப்பது நிமிடம் கழித்து அந்த பாத்திரத்தை எடுத்து நான்கு மணி நேரம் பிரிட்ஜ்-ல் வைத்து குளிர்விக்கவும்.
10. நான்கு மணி நேரம் கழித்து கேரமல் பிரட் புட்டிங் தயார்
0 comments:
Post a Comment