Thursday 19 March 2020






தேவையான பொருட்கள்

காளான் - 200 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கம்மின் விதைகள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு
கொத்துமல்லி தழை

மசாலா விழுது அரைக்க

எண்ணெய்
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
பூண்டு
இஞ்சி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்

செய்முறை

1. செட்டிநாடு காளான் மசாலா செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த சிவப்பு மிளகாய், பூண்டு பற்கள், இஞ்சி சேர்த்து நன்கு வறுக்கவும்.


2. துருவிய தேங்காயை இந்த கலவையில் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.


3. இந்த வறுத்த கலவையை மிக்ஸியில் சேர்த்து இதனுடன் ஒரு துண்டு ஊறவைத்த புளி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


4. காளான் மசாலா செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.


5. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


6. இந்த வதக்கியவற்றில் நறுக்கிய காளான் மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கலக்கிய பின்பு கடாயை மூடி பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.


7. சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்,..... 

0 comments:

Post a Comment